Advertisement

SIP என்றால் என்ன? சிறு முதலீட்டின் மூலம் பெரிய லாபம் அடைவது எவ்வாறு?

     SIP என்பது சிஸ்டெமடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் எனப்படும் முறையான முதலீட்டு திட்டம் ஆகும். இது குறிப்பிட்ட இடைவெளியில்  தொடர்ச்சியாக முதலீடு செய்யும் முறை ஆகும். SIP  ஆனது பெரும்பாலும்  மியூட்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய பயன்படுத்தப்படுகிறது.

what is sip in share market in Tamil, what is the meaning of sip in share market what is sip investment in share market what is sip in stock market which is better sip or share market what is sip in trading

   SIP இல் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை என நமக்கு ஏற்றவாறு முதலீடு  செய்யும் இடைவேளையை  மாற்றிக் கொள்ளலாம்.  மியூட்சுவல் பண்டுகளில் பல வகையான பண்டுகள்  உள்ளன. குறைந்த முதலீட்டு தொகை (Minimum  investment  amount) என்பது எந்த மியூட்சுவல் பண்டை தேர்வு செய்கிறோம் என்பதை பொறுத்து மாறுபடும். SIP மூலம் குறைந்த முதலீட்டு தொகையின் மடங்குகளாக இன்வெஸ்ட் செய்ய முடியும். எடுத்துக்காட்டாக ஒரு மியூட்சுவல் பண்டின் குறைந்த முதலீட்டு தொகை ரூ 100  எனில் அதன் 5  மடங்கு ரூ 500 யை மாதந்தோறும் SIP மூலம் இன்வெஸ்ட் செய்யலாம்.

SIP இல் எவ்வாறு முதலீடு செய்வது?  

    SIP இல் இன்வெஸ்ட் செய்ய நீங்கள் ZerodhaICICI Direct போன்ற ப்ரோக்கர்களிடம்  டீமேட் கணக்கு தொடங்க வேண்டும். பின்பு மியூட்சுவல் பண்டுகளை தேர்வு செய்ய வேண்டும் . அதில் மாதம் எவ்வளவு முதலீடு செய்யவது என்பதை முடிவு செய்ய வேண்டும்.  பின்   டீமேட் கணக்கில் SIP முறையை தேர்வு செய்து மாதந்தோறும் எந்த தேதியில் வாங்க வேண்டும் எவ்வளவு தொகை என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்பு முதல் தவணையை செலுத்தி அந்த பண்டுகளை வாங்க வேண்டும். நேரடியாக மாதந்தோறும் நமது வங்கிக்கணக்கில் இருந்து தவணை தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிப்பதன் மூலம் குறிப்பிட்ட தேதியில் தானாகவே பண்டுகளை வாங்கி கொள்ளும்.

 SIP மூலம் இன்வெஸ்ட் செய்வதனால் ஏற்படும் பலன்கள்: 

  SIP இல் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட கால அளவில்  தொடர்ந்து முதலீடு செய்கிறோம். ஆகவே பங்குச்சந்தை உச்சத்தில் உள்ள பொழுது மியூட்சுவல் பண்டின் விலை அதிகமாக இருக்கும் எனவே குறைந்த எண்ணிக்கையை வாங்கும். மியூட்சுவல் பண்டின் விலை குறைவாக இருக்கும் பொழுது அதிக எண்ணிக்கையை வாங்கும். எனவே சராசரி விலை (Average Price)   குறைவாக இருக்கும். இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும்.

  SIP இல் இன்வெஸ்ட் செய்யும் தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைத்துக்கொள்ளாவோ முடியும். இதில் இடையிலேயே இன்வெஸ்ட் செய்வதை நிறுத்திக் கொள்ளவும் முடியும். பண தேவை ஏற்படும்  பொழுது சில எண்ணிக்கையை விற்று தேவையை பூர்த்தி செய்யவும் இயலும்.

    நேரடியாக பங்குச்சந்தையில் ஸ்டாக்களில் இன்வெஸ்ட் செய்யவதை காட்டிலும் மியூட்சுவல் பண்டுகளில் இன்வெஸ்ட் செய்வது ரிஸ்க் குறைவானது. அதிலும் SIP முறை மூலம் மியூட்சுவல் பண்டுகளில் இன்வெஸ்ட் செய்வதன் மூலம் ரிஸ்க் மிகவும் குறைகிறது.  

      இதில் முதலீடு செய்யும் தொகை கூட்டு வட்டியின் (compound Interest)  மூலம் அதிக லாபத்தை தருகிறது. கூட்டு வட்டியின் மூலம் கிடைக்கும் பலன்கள் நாம் அறிந்ததே. 

 சிறு முதலீட்டின் மூலம் பெரிய லாபம்:

    SIP மூலம் மாதந்தோறும் நாம் செலுத்தும் சிறு தொகையானது 20 அல்லது 30  ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய தொகையாக நமக்கு கிடைக்கிறது. நீங்கள் உங்கள்  30  வயதில் SIP இல்  மாதம் ரூ 5,000 என இன்வெஸ்ட் செய்ய தொடங்குகிறீர்கள் என எடுத்துக்கொள்வோம். அந்த பண்டானது வருடத்திற்கு 7% வளர்ச்சி அடைவைதாக  கொண்டால் மொத்தம் செலுத்திய தொகை ரூ 18  லட்சமாகும். உங்களுக்கு 60  வயதில்  கிடைக்கும் தொகை  ரூ 61 லட்சமாக இருக்கும். இது குறைந்த மதிப்பீடு ஆகும். பெரும்பாலான மியூட்சுவல் பண்டுகள் வருடத்திற்கு குறைந்த பட்சம் 9 % வளர்ச்சி அடைகிறது. 

    இது போன்ற ஷேர் மார்க்கெட் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் தொடர்பான செய்திகளை தமிழில் உடனுக்குடன் அறிந்து கொள்ள Getprofit  இணையதளத்தை Google News இல் பின்தொடரவும். Subscribe

...

கருத்துரையிடுக

0 கருத்துகள்